fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித் எடுக்கும் ரிஸ்க்.. விரைவில் வலிமையை கொண்டாடப் போகும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித் எடுக்கும் ரிஸ்க்.. விரைவில் வலிமையை கொண்டாடப் போகும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தல அஜித். சமீபகாலமாக அஜித்தின் படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் உருவாகி வருகிறது. தல அஜித் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் தல அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக களமிறங்கியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க வலிமை படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக எப்போது படப்பிடிப்பு தொடங்க போகிறார்கள் என்று எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.

அதற்கு காரணம் தல அஜித், கொரானா பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடித்த பிறகு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என படக்குழுவினருக்கு உத்தரவு போட்டதாக தெரிகிறது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.

மற்ற நடிகர்களின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே ஒரு வருடமாகியும் பாதி படப்பிடிப்புகளில் தடுமாறிக் கொண்டிருக்கிறது வலிமை.

இந்நிலையில் தல அஜித் தற்போது ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்க உள்ளாராம். படப்பிடிப்பை அக்டோபரில் தொடங்க படக்குழுவினருக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. அடுத்த வருடம் சம்மர் ரிலீசாக வலிமை படத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.

Continue Reading
To Top