பில்லா அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.

billa ajith stills
billa

இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

Billa-Ajith

அஜித்தின் படங்கள் வரிசையில் பில்லா படமும் முக்கியமானது. காரணம் சொல்ல பல விசயங்கள் உண்டு. இதன் தயாரிப்பாளர் அப்போதே இதை பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு படம் ட்ரண்ட் செட்டாகும்.

அப்படியாக ரஜினிக்கு சிவாஜி, கமலுக்கு தசாவதாரம் போல அஜித்திற்கு பில்லா தான். இது அவருக்கு மைல் ஸ்டோனாக அமைந்த படம். ஹாலிவுட் போல அவருக்கு அப்போதே பெருமை கொடுத்தது.

Ajith-billa

மேலும் தமிழ்நாட்டில் படம் வந்த இரண்டு நாட்களில் 13 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்களாம். அதோடு இரண்டு நாளில் ரூ 10 கோடி வரை வசூல் செய்தது. அதுமட்டுமில்லாமல் இதுவே பெரும் மார்கெட்டிங்காக அமைந்தது.

அஜித்துக்கு மாஸாக இருந்தது என கூறுகிறார் பில்லா படத்தின் தயாரிப்பாளர்.