Connect with us

Cinemapettai

விஜய் இயக்குனரை கேட்ட அஜித்.. தல இயக்குனரை கேட்ட தளபதி.. கோடிகளை பங்கு போடும் முன்னணி நடிகர்கள்!

vijay-ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் இயக்குனரை கேட்ட அஜித்.. தல இயக்குனரை கேட்ட தளபதி.. கோடிகளை பங்கு போடும் முன்னணி நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்சமயம் மிகப் பெரிய வியாபாரம் உள்ள நடிகர்களில் விஜய் மற்றும் அஜீத் கடும் போட்டியில் இருக்கின்றனர். இருவரின் படங்களுமே பெரிய அளவில் வசூலை குவித்து வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் தல மற்றும் தளபதி ரசிகர்கள் பட்டாளங்கள் மிக அதிகம். இருவரின் படங்கள் வெளியாகும் போதும் தமிழ்நாடே திருவிழா போல காட்சியளிக்கும். இருந்தாலும் இவர்களின் ரசிகர்களுக்குள் அடிக்கடி முட்டிக் கொள்கிறது.

ஆனால் தல மற்றும் தளபதி ஆகிய இருவருமே நட்பையும் தாண்டி ஒரு நல்ல உறவில் நீண்டகாலமாக இருந்து வருகின்றனர். அது தெரிந்து இருந்தாலும் அடித்துக் கொள்வது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.

ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே தல அஜித்தை வைத்து படம் பண்ண நினைப்பவர்களை தளபதி விஜய் இடம் அனுப்புவதும், தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கியவர்களை தல அஜித்துக்கு கதை சொல்ல அனுப்புவதும் இருவருக்கும் புதிதல்ல.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர்களாக வலம் வருவது மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் மற்றும் வலிமை வினோத் தான். தான் இயக்கிய சில படங்களிலேயே பெரிய நடிகர்களை ஈர்த்தவர்கள்.

இந்நிலையில் வலிமை படத்தை இயக்கி வரும் வினோத்திடம் தளபதி விஜய் கதை கேட்டதாகவும், மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இடம் தல அஜித் ஒரு கதை கேட்டதாகவும் சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top