Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறதா….அஜித்தின் ‘AK57’ ரிலிஸ்?

வீரம், வேதாளம்.. எனத்தொடர் வெற்றிகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘AK57’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார்கள்.

இரண்டாவது முறையாக அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கலன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் தமிழ் புத்தாண்டில் (April 14) வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படம் ஜூனில் ரம்ஜான் விடுமுறை நாட்களையொட்டி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top