Tamil Cinema News | சினிமா செய்திகள்
பூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.?
அஜித்தின் அடுத்த படம்
அஜித் நடிப்பில் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் பாடல் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார்.

ajith viswasam
படத்தில் நயன்தாரா, தம்பி ராமையாஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அஜித்தை வைத்து சிவா இயக்கும் நான்காவது படமாகும். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம் ஆகிய படங்கள் திரையரங்கிள் வெற்றி நடைபோட்டன. இப்படத்தை பற்றி தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் உள்ளன. இருப்பினு அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித்தின் அடுத்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என வெளியாகியுள்ளன. இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பொறுத்திருந்து இப்படத்தின் தகவலை பற்றி பார்ப்போம். இதனால் ரசிகர்கள் ஆர்வமோடு காத்திருக்ககின்றனர் .
