Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல 62 படத்தின் இயக்குனர் இவரா.? அப்போ படம் டாப்பு டக்கருதான்

thala 62 : நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.
அதேபோல் தல 60 திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகியது, இந்த திரைப்படம் ஒரு புதிய ஸ்டோரி என்று தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்தது தான் இந்த நிலையில் தல 62 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளன.
தல 62 திரைப்படத்தை விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி கூட்டணி தான் இயக்க இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அவர்களே கூறியுள்ளார்கள்.
