தல அஜித் என்றால் தன்னடக்கம், தன்னம்பிக்கை, தனிமனிதத்துவம் என்று தமிழ் அகராதியில் உள்ள நல்லொழுக்கங்களை அத்தனை வார்த்தைகளும் ஒருங்கே பெற்று அமைந்த மனிதராவார். இவரது குணத்தை கண்டு பிடிக்காமல் இருப்பவர்கள் யாருமில்லை.
அதேபோல் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்கள் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவார். மேலும் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து வரும் ஒரு உன்னதமான மனிதன் தல அஜித்.
இந்நிலையில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக வரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதேபோல் தல-60 படம் முழுக்க முழுக்க ஆக்சன் மையப்படுத்தி கதை எழுதி இருந்தாலும் அதில் பெண்களை ஏதேனும் வகையில் போற்றுமாறு இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக உள்ளார்.
தல-60 படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தை எழுதி இயக்குகிறார், வினோத். சமீபத்தில் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் ஒரு தனியார் ஓட்டலுக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
