Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.! வைரலாகும் புகைப்படம்
விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி உள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து விட்டதால் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது, படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.
#Thala59 Pooja Done, Hope it is a Quickie and it's gonna be for all class Audience like #YennaiArindhaal ❤️
Excited and hope he's gonna have two releases on 2019 !! pic.twitter.com/mYFtQhU6eV— Ram Muthuram Cinemas (@RamCinemas) December 14, 2018
இதைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் புகழ் வினோத் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் இந்த படம் பிங்க் ரீமேக் என கூறப்படுகிறது, இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.
பிங்க் திரைப்படம் பாலிவுட்டில் மிகப் பெரிய ஹிட்டானது, இந்த படத்தில் அமிதாப் பச்சன் டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தார்கள், தல-59 ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது , இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என அறிவித்துள்ளார்கள்.
