Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.! அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும், இந்தநிலையில் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
பெயரிடப்படாத இந்தப் படத்தை தல-59 என அழைத்துவருகிறார்கள், இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்டது படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை ஆனால் இந்த படம் பிங்க் ரீமேக் என கூறுகிறார்கள் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார் .
ஆனால் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது அஜித் ரசிகர்களின் பேவரைட் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இதை அவரே தனது ட்விட்டரில் கூறியுள்ளார், இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இந்த செய்தியை ஷேர் செய்து வருகிறார்கள் யுவன் ஷங்கர் ராஜா இதற்கு முன் தீனா மங்கத்தா, பில்லா, பில்லா-2 ஏகன், ஆரம்பம் ஆகிய படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Happy to be associated on this one after so many years 🙂 #Thala59 ??????? ??
— Yuvanshankar raja (@thisisysr) December 14, 2018
