Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல-59 படத்தில் நஸ்ரியாவுக்கு ஜோடி தல கிடையாது வேற யார் தெரியுமா.?
நடிகர் அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, இந்த படத்தை தொடர்ந்து அஜித் தீரன் அதிகாரம் ஓன்று படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார்.

pooja
இந்த திரைப்படம் பாலிவுட்டில் ஹிட் ஆனா பிங்க் படத்தின் ரீமேக் ஆகும், பாலிவுட்டில் பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் மற்றும் டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தார்கள், இந்த படத்தின்ரீமேகில் தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்றும் தற்போது சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.

Nazriya-Nazim
தல 59 என அழைக்கப்படும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், படத்தில் டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது, தற்போது வெளியாகிய தகவல் என்னவென்றால் நஸ்ரியாவுக்கு ஜோடியாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
