Tamil Cinema News | சினிமா செய்திகள்
15 வருடத்திற்கு பிறகு அஜித்தின் பிங்க் ரீமேக்கில் மீண்டும் இணைந்த பிரபலம்.! ரசிகர்கள் குஷியில்
Thala 59 : அஜித் பிங்க் படத்தில் ஜனா பட பிரபலம்.!
தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிக்கும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார், அஜித்தின்59 வது திரைப்படம் ஆகும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார் மேலும் மிக முக்கியமான கேரக்டர்களில் ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன் அபிராமி வெங்கடாசலம், அர்ஜுன் சிதம்பரம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித், என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள்.
மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய பிரபலம் இணைந்துள்ளார் அஜித்தின் ஜனா படத்தில் நடித்த டெல்லி கணேஷ் இந்த படத்திலும் இணைந்துள்ளார், இவர் முக்கியமாக மூன்று பெண் கேரக்டர்களில் நடிக்கும் பெண்களின் ஒரு பெண்ணிற்கு தந்தையாக நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் தான் இயக்கி வருகிறார் படத்திற்கு பிரமாண்டமாக இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா திரைப்படத்தை வருகின்ற மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
