Connect with us
boomerang-movie

தல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா ?

News | செய்திகள்

தல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா ?

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும் டிராமா வகை ஜானர். U / A சென்சார் சான்றிதழ் பெற்ற படம். சுமார் 25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் போனி கபூர். இயக்குனர் வினோத் என்பது மட்டுமே கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் ட்விட்டரில் சில போட்டோக்கள் வைரலாக பரவியது. ஒரு போட்டோவில் AK59 என்று இருந்தது, மற்றறொன்றில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் போட்டோ.

பட பூஜை நடப்பது உறுதியானது. எனினும் மற்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. சில மணிநேரம் முன்பே யுவன் தான் தல படத்தில் இணைந்ததாக ட்வீட் செய்தார்.

பின்னர் சில போட்டோக்கள் வெளியாகி உள்ளது.

pooja

pooja

இதில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், இயக்குனர் உடன் படக்குழுவும் இருந்தனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா உள்ளார்.

pooja

போனி கபூர் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இது.

சினிமாபேட்டை கிசு கிசு

இங்கலீஷ் விங்கிலீஷ் பட சமயத்தில் அஜித் ஸ்ரீதேவியுடன் படம் பண்ணுவதாக சொல்லியுள்ளார். அதனை தான் அவர் நிறைவேற்றியுள்ளார். மேலும் பிங்க் படத்தை ரிமேக் செய்யலாம் என அஜித் தான் சொன்னதாகவும், இயக்குனராக வினோத்தை போனி கபூர் முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

Thala 59

போட்டோக்களில் உடன் ரங்கராஜ் பாண்டேவும் உள்ளார். இவர் முக்கிய ரோலில் நடிப்பார் என்கின்றனர் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள். அதுவும் ஒரிஜினல் வெர்ஷனில் வரும் எதிர் கட்சி வக்கீல் வேடம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நீதிமன்ற காட்சிகளில் அஜித் போன்ற நடிகருடன் வாக்குவாதம் செய்ய இவரை விட சிறந்த நபர் கிடையாது என்பது தான் உண்மை.

ஹீரோ, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என யாருக்கும் ட்விட்டர் இல்லாததால் தான் போட்டோக்கள் இவ்வளவு லேட்டாக வெளியானதோ ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top