அஜித்தின் அடுத்த படத்திற்கான பேஸிக் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ’தல 58’ எனும் டைட்டிலுடன் இந்த பணிகள் கியர் அப் ஆகியிருக்கின்றன. இந்த ப்ராஜெக்ட் பற்றி கோலிவுட்டில் பற்றி எரியும் தகவல்களின் ஹாட் ஹைலைட்ஸ் இதோ….

அஜித்தின் இந்த படத்தின் டைரக்டரும் அதே சிறுத்தையே! யெஸ் வீரம், வேதாளம், விவேகம் என ஹாட்ரிக் அடித்த அதே கூட்டணிதான் இதிலும் கைகோர்க்கிறது.

ajith

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

வீரம், வேதாளம், விவேகம் வரிசையில் இந்த படத்துக்கும் ‘வி’ எனும் அஜித்துக்கு செண்டிமெண்டான எழுத்தில்தான் டைட்டில் வைக்கப்படும்.

வேதாளம், விவேகம் இரண்டிலும் கொல்கத்தா, ஃபாரீன் என்று கதை களம் தமிழ் மண் தாண்டி போய்விட்டதால் இந்த படத்தில் ’பேக் டூ தமிழ்நாடு’ என்று வீரம் ஸ்டைலில் ஒரு மண் மணக்கும் தரமான லோக்கல் ஸ்டோரியாக அமையப்போகிறது என்கிறார்கள்.

ajith

கடந்த 3 படங்களிலும் சால்ட் அண்டு பெப்பர் மற்றும் ஸ்நோயி டைப்பில் ஹேர் ஸ்டைல் வைத்திருந்த அஜித் இந்த படத்தில் கலர் மற்றும் ஸ்டைலை மாற்றுகிறாராம்.

வாலி ஸ்டைல் ஹேர்ஸ்டைல் மற்றும் பாடி ஸ்ட்ரக்சரில் அஜித் வந்தால் இந்திய சினிமாவே மெர்சலாகும் என்று தலயிடம் ஒரு ஐஸ் கோரிக்கையை வைத்திருக்கிறாராம் சிவா.

‘எப்டிங்க சார் அது முடியும்?’ என்று ஜூனியர்ஸ் சிவாவை கேட்க, ‘ஏன்? விவேகத்துக்காக அவரு 6 பேக் வைக்கலையா! முடியாததை முடிப்பாரு அதான் அஜித் சார்.” என்று கவுன்ட்டர் கொடுத்தாராம்.

ajith vivegam
ajith vivegam

முடியாத பட்சத்தில் அட்லீஸ்ட் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திலிருந்த தோற்றத்திலாவது அஜித் வருவார் என்கிறார்கள். ஆனால் இவை எதையும் சிறுத்தை சிவாவின் தரப்பு ஒப்புக் கொள்ளவுமில்லை, மறுக்கவுமில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. முழுக்க முழுக்க ஒரு புதிவிதமான பரவச அறிவிப்பு தல ரசிகர்கள் தல தெறிக்க சந்தோஷிக்குமளவுக்கு வெளியாகும் என்று கோலிவுட் பட்சி கண்ணடிக்கிறது.