‘மும்பை சிங்கம்’ என்று அனைவராலும் பாசமாக  அழைக்கப்படுபவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் சிவா சேனாவின் அரசியல் தலைவர் பால் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே.

மஹாராஷ்டிரா மக்களின் உரிமைக்காக போராடிய அவர் சிவசேனா கட்சியை தொடங்கி மக்களுக்காக பல்வேறு  போராட்டங்களை நடத்தியவர் . தனது ஆதரவில்லாமல் எந்தக் கட்சியும் மும்பையில் ஆட்சி நடத்த முடியாது என்கிற நிலையை உருவாக்கி வைத்தார்.

இந்தப் படத்தை சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் தயாரிக்கிறார். அபிஜித் பன்சே இயக்குகிறார். இதில் பால் தாக்கரேவாக பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார்.

இப்படத்தின் டீசரை நேற்று  அமிதாப் பச்சன், பால் தாக்கரேவின் குடும்பத்தினர் முன்னிலையில் வெளியிட்டார். இந்த விழாவில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவும் கலந்துகொண்டார்.

https://www.youtube.com/watch?v=wpUwdr4IRvs

படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரியில் தொடங்குகின்றன. 90 சதவிகித ஷூட்டிங் மும்பையிலேயே நடக்கும் எனக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் சஞ்சய் ராவத்மிந்தப் படம் 2019 ஜனவரி 23 வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தாக்கரே அவர்களின் 93 வது பிறந்த தினத்தன்று.

சிவா சேனா இந்து மதம் சார்ந்த அமைப்பு. அதன்   தலைவராக, வாழ்நாள் முழுக்க இந்துத்வ கொள்கைகளோடு வாழ்ந்த தலைவரின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு முஸ்லீம் நடிகர் ஒருவர் நடிப்பது பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. நவாஸுதீன் சித்திக் நடிப்பதால்  இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.