Tamil Cinema News | சினிமா செய்திகள்
தானா சேர்ந்த கூட்டம் படகுழுவால் மன உளைச்சலுக்கு ஆளானா சுரேஷ் மேனன்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது படத்தில் வில்லனாக நடித்தவர் சுரேஷ் மேனன் இவர் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் ஆவார்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசன்டான வில்லனாக நடித்து அசந்தியிருந்தார் சுரேஷ் மேனன்.ஆனால் தானா சேர்ந்த கூட்டம் படக்குழு மீது ஒரு திடுக் புகாரை வைத்துள்ளார் சுரேஷ் மேனேன்..
அவர் கூறியதாவது இந்த படத்தில் முழுக்க முழுக்க நான் டப்பிங் பேசிகொடுத்துள்ளேன் ,ஆனால் படத்தில் என்னுடைய குரலை நீக்கிவிட்டு இயக்குனர் கௌதம் மேனன் குரலை வைத்துள்ளார்கள் ஏன் குரல் நல்லாதா இருக்கிறது ஏன் அதை மாற்றினார்கள் ஏன் குரல் தான் என்னுடைய கதாபாத்திரத்திற்கு காண கச்சிதமாக பொருந்திருக்கும் என நம்புகிறேன்.
மேலும் அவரின் சொந்த குரலில் பேசி நடித்துள்ள ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
தான் இவ்வளவு விஷயங்களை செய்தும், படத்தின் கதாநாயகனும், பிரபல ஹீரோவுமான நடிகர் சூர்யா மற்றும் படக்குழு வாயே திறக்காமல் இருப்பதாள் மிகவும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார் சுரேஷ்மேனன்.
