Tamil Cinema News | சினிமா செய்திகள்
தானா சேர்ந்த கூட்டம் மற்றும் ஸ்கெட்ச் முதல் நாள் சென்னை வசூல் நிலவரம் எது அதிகம் தெரியுமா.

தமிழ் சினிமாவில் மிக கடினமாக உழைக்கும் நடிகர்களில் சூர்யாவும், விக்ரமும் இருவர் இவர்கள் தமிழ் சினிமாவில் வித்யாசமாக நடிப்பவர்கள் இவர்கள் இருவருக்கும் திரைப்படம் வந்துள்ளது.
சூர்யாவின் படம் தானா சேர்ந்த கூட்டம் நேற்று திரைக்கு வந்துள்ளது இந்த படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது, இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக் ,ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அதேபோல் விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இந்த படமும் நேற்று திரைக்கு வந்துள்ளது.
இவர்களின் இரண்டு படமும் திரையில் நன்றாக தான் ஓடிக்கொண்டு இருக்கிறது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளிவந்துள்ளது.அதன் படி சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் சென்னையில் முதல் நாள் வசூல் கிட்ட திட்ட 82 லட்சம் வரை வசுல் சேர்த்துள்ளது.
மேலும் ஸ்கெட்ச் திரைப்படம் சென்னையில் மட்டும் 39 லட்சம் வசூல் சேர்த்துள்ளது. இதுவரை வெளிவந்த சூர்யா படத்திலேயே இந்த படம் தான் சென்னையில் வசூல் அதிகம் குறிப்பிடத்தக்கது.
