Connect with us
boomerang-movie

மிரட்டப்பட்ட சூர்யா படம்! அதிர்ச்சியளித்த சூர்யா ரசிகர்கள்..

News | செய்திகள்

மிரட்டப்பட்ட சூர்யா படம்! அதிர்ச்சியளித்த சூர்யா ரசிகர்கள்..

சூர்யா கடைசியாக நடித்த நான்கு படங்களும் தோல்வியடைந்ததால் சூர்யா ரசிகர்கள் ஏற்கனவே விரக்தியில் உள்ளார்கள். சரி. ‘நானும் ரௌடிதான்’ வெற்றிப் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் மூலம் சூர்யாவிற்கு நிச்சயம் ஹிட் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் இப்படத்தை நீண்ட மாதங்களாக எடுத்து வருகிறார் விக்னேஷ் சிவன். படத்தைப் பற்றி எந்தத் தகவலுமே இல்லாததால் ஏற்கனவே சூர்யா ரசிகர்கள் விக்னேஷ் சிவனைத் திட்டினர். இதனால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். ஆனால் ரசிகர்கள் திருப்தியாகவில்லை.

இந்நிலையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நுழைந்த சூர்யா ரசிகர்கள் அங்கேயே ஷூட்டிங்கை தங்களது மொபைலில் படமெடுக்கத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்தனர் படக்குழுவினர். அப்போது அவர்கள் ‘’சூர்யா படத்தின் டீசரைக் கூட ரிலீஸ் செய்யமாட்டீர்கள்.

நீங்கள் ரிலீஸ் செய்யவில்லை என்றால் என்ன… நாங்களே ரிலீஸ் செய்து கொள்கிறோம்’’ என்றனர்.தயாரிப்பு தரப்பு உடனடியாக அவர்கள் நெட்டில் வெளியிட்ட ஃபுட்டேஜை அழித்துவிட்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top