விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக் ,ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

surya

தானா சேர்ந்த கூட்டம் சாதனை:

இந்த படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் தானா சேர்ந்த கூட்டத்தின் வெளியான செகன்ட் லுக் விவேகம் , மெர்சல் சாதனையை சமீபத்தில் முறியடித்தது, அதிகமாக ரீட்விட் செய்யப்பட்ட படம் என்ற பெருமையை தான சேர்ந்த கூட்டம் பெற்றுள்ளது. அஜித் விஜய் ரசிகர்கள் தான் இதுபோல் சாதனையை நடத்துவார்கள் தற்பொழுது சூர்யா ரசிகர்களும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்கள். இந்த படத்தின் ரீட்விட் 74k தாண்டியுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் டைட்டில் சாங் டீசர் டிசம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்தார்கள் இதை ரசிகர்கள் ஆராவரத்துடன் ரசித்தார்கள்.

தானா சேர்ந்த கூட்டம் மொத்த விற்பனை விவரம்:

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தமிழ் நாட்டு உரிமையை பாரத ரத்னா பிலிம்ஸ் ரூ 36 கோடிக்கு வாங்கியுள்ளது, அதேபோல் கேரளா உரிமையை அமூர் ரூ 3.5 கோடிக்கு வாங்கியுள்ளார், உலகம் முழுவது ரிலீஸ் உரிமையை டிஎஸ்ஆர் பிலிம்ஸ் ரூ 13 கோடிக்கு கைப்பற்றியுள்ளது, அதேபோல் தமிழ் சேட்லைட் உரிமையை பிரபல சன் டிவி ரூ 11கோடிக்கு  கைப்பற்றியுள்ளது, டிஜிட்டல் ரைட்ஸ் Amazon நிறுவனம் ரூ 25 கோடிக்கு வாங்கியுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் பெயர்:

keerthi

இந்த படத்தில் நடித்தது பற்றி கீர்த்தி சுரேஷ் தனது அனுபத்தை கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் பிராமண பெண்ணாக நடித்துள்ளேன் மேலும் என் கதாபாத்திரம் மிகவும் சஸ்பென்ஸ் ஆக இருக்கும் ,இந்த படத்தின் கதை மற்றும் எனது ரோல் பற்றி விக்னேஷ் சிவன் சொன்னவுடனே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது,அதுமட்டும் இல்லாமல் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என பள்ளியில் படிக்கும் பொழுதே ஆசை, அதேபோல் என் அம்மாவும் சூர்யா அப்பாவான சிவகுமாருடன் 3 படங்களில் நடித்துள்ளார்.

keerthi

அதேபோல் நானும் எனது பள்ளி பருவ ஆசையை சூர்யாவுடன் நடித்து நிறைவேற்றிக்கொண்டேன் மேலும் இந்த படத்தில் ஒரு சுவாரசியமான தகவலை கூறியுள்ளார் கீர்த்தி. இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா என கூறிவிட்டு இந்த படத்தில் எனக்கு பெயரே கிடையாது படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை என்னுடைய பெயர் பயன்படுத்தபடாது கடைசிவரை சஸ்பென்சாகவே இருக்கும் என கூறினார்.