Reviews | விமர்சனங்கள்
தானா சேர்ந்த கூட்டம் எப்படி இருக்கு தெரியுமா? அடேங்கப்பா விமர்சனம்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சொடக்கு மேல சொடக்கு போட்டு தானா சேர்ந்த கூட்டம் படத்தை பார்த்து வெளியே வந்த என்ன தோணுதுன்னா சூர்யாவ பத்தி கலாய்ச்சி மீம்ஸ் போட்டவங்க fb ல கமென்ட் போட்டவங்க ட்விட்டரல டிவிட் பண்ணுனவங்க எல்லாத்துக்கும் ஒரு செம்ம வசனம் இருக்கு இத கேட்டா நீங்களே மெர்சல் ஆகிடுவிங்க. விக்னேஷ் சிவன் ஸ்டைல்ல சூர்யாவையும் கீர்த்திசுரேஷ்யும் அழக காமிசிருக்காறு.
இந்த படத்தில் மிக முக்கியமாக சோசியல் கருத்துகள் நிறையா சொல்லிருக்காங்க ஆனா எதையும் அழுத்தமா சொல்லாமல் படம் போற போக்குல அப்டியே சொல்லிருக்காங்க.விக்னேஷ் சிவன் ஸ்டைல் எப்படியோ, படமும் அப்படியே போகும் படத்தில் உள்ள சோசியல் கருத்து மக்களிடம் சேருமா செராதான்னு தெரில ஆனா படம் பார்க்கும் பொழுது கைதட்டல் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரிக்கலாம், செம்ம ஜாலியா போகும் படம்.
ஒரு சீன்ல RJ பாலாஜி ரம்யாகிருஷ்னான் பற்றி சொல்லுவாரு அதற்க்கு தியேட்டர் உள்ள அனைவரும் கைத்ட்டுவாங்க அந்த சீன் அவ்ளோ பொருத்தமா இருக்கும் அந்த இடத்தில். இப்பொழுது மியூசிக் பத்தி சொல்லணும்னா நம்ம அனிருத் படத்தில் பட்டைய கேளப்பிட்டாறு மியூசிக்கில்,அதுவும் சொடக்கு மேல பாட்டுக்கு ரசிகர்கள் அப்படி ஆடினார்கள் இதை நேரில் பார்த்தால் தான் புரியும்.
இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு மற்ற படங்களை விட கொஞ்சம் வித்யாசமாக இருக்கும், அதுமட்டும் இல்லாமல் காமெடியில் யோகிபாபு அப்போ அப்போ கலக்கிருக்கார் புது விதமான காமெடியில். எல்லா படத்தை போலவும் இந்த படத்திலும் பார்த்தவுடனே காதல் வந்துவிடும்.
படத்தில் செட் ஆகாத ஒன்னு:
படத்தில் கௌதம் வாசுதேவ் வாய்ஸ் மட்டும் அவ்வளவு பொருத்தமா இல்லை அதை மற்றும் கொஞ்சம் மாத்திருக்கலாம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு அந்த அளவிற்கு அழுத்தமான ரோல் கிடையாது.
Verdict: இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
Rating: 3/5
