சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் ஏன் என்றால் சூர்யா படத்தின் அப்டேட் வெளிவந்ததே இதற்கு காரணம் சூர்யா இப்பொழுது நடித்துகொண்டிருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்.

விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீடு, படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.

விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள், டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சந்தோஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,அன்பான ரசிகர்கள் ஆசைப்பட்டதால் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் அக்டோபர் மாதமும், நவம்பரில் டீசரும், இசை வெளியீடு மற்றும் டிரைலர் டிசம்பரில் நடக்க இருக்கிறது. இதற்கிடையே அவ்வப்போது பாடல்கள் வெளியாகும்.அதனைத் தொடர்ந்து படம் வருகிற பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.