Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் குடும்பம் நாசமாக போனதுக்குக் காரணமே இவர்தான்.. தாடி பாலாஜி பகீர் புகார்
சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான தாடி பாலாஜி பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தொலைக்காட்சி பக்கம் வந்தார்.
தாடி பாலாஜி பகீர் புகார்
சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான தாடி பாலாஜி பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தொலைக்காட்சி பக்கம் வந்தார். தொலைக்காட்சிக்கு வந்தபின் சற்று பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்
பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து பிரச்சினைகள் வர ஆரம்பித்தது என தாடி பாலாஜி மனைவி நித்யா கூறி கொண்டிருந்தார். அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் வந்தது பாலாஜி தினமும் குடித்துவிட்டு நடிக்கிறார் என புகார் அளித்தார்.
நடிகர் கமல் முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி இருவரையும் சேர்த்து வைத்தது, பின்பு இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். இப்பொழுது திடீரென்று நித்யா பாலாஜி மீது திரும்பவும் குடிக்க வைத்து அடிக்கிறார் என புகார் அளித்துள்ளார்.
இதனால் கடுப்பான பாலாஜி ஒரு பிரஸ்மீட் வைத்து நடந்தது என்ன என்பதை விலாவரியாக கூறினார். காவல்துறை அதிகாரி மனோஜ்குமார்தான் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார் என்ன பாலாஜி காவல்துறை அதிகாரி மீது புகார் அளித்துள்ளார். இதற்கு நித்யா என்ன பதில் சொல்வார் என்று பார்க்கலாம்.
