திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

கங்குவாவை லெப்ட் ஹாண்டில் டீல் செய்த அஜித்.. என்ன இப்படிலாம் சோதனை வருது சூர்யாக்கு

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. அஜித்துடன் இணைந்து, அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான பின், இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் இதில் அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படமும் பிரமாண்டமாக உருவாகி வரும் நிலையில், இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு ரிலீசாகவுள்ளது.

பொதுவாகவே தமிழ் நாடு, கேரளத்தில் அஜித்துக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரது ஒவ்வொரு படத்துக்கும் ஓபனிங் பெரியளவில் இருக்கும். இதனால் விடாமுயற்சி, குட் பேட் அக்லி பட வேலைகள் இன்னும் முடியவில்லை என்றாலும் கூட, இதன் விற்பனை நடந்து வருகிறது.

அதன்படி, விடாமுயற்சி & குட் பேட் அக்லி படங்களின் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான துணிவு படத்துக்குப்பின் இன்னும் அஜித் படம் ரிலீசாகாத நிலையில், இவ்வாண்டு அவரது ரிலீசாகாது என தெரிகிறது?

அதனால் அடுத்தாண்டு மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் விடாமுயற்சி திரைக்கும் வரும் என தெரிகிறது. அவரும் பொங்கல் அல்லது தமிழ்ப் புத்தாண்டுக்கு குட் பேட் அக்லி படம் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

ரிலீஸுக்கு முன்பே கங்குவாவை லெப்ட் கேண்டில் டீல் செய்த அஜித் படங்கள்

இந்த நிலையில், இவ்விரு படங்களும் ரிலீஸாகும் முன்பே, இரு படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதன்படி, விடாமுயற்சி பட டிஜிட்டல் உரிமையை ரூ.75 கோடிக்கும், குட் பேட் அக்லி பட டிஜிட்டல் உரிமையை ரூ.95 கோடிக்கும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இவ்விரு படங்களி டிஜிட்டல் விற்பனை அளவு கூட சூர்யாவின் கங்குவா படம் வசூல் குவிக்கவில்லை எனவும் நெகட்டிவ் விமர்சனங்களால் இது கங்குவாவுக்கு வந்த சோதனை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அஜித்தின் இரு படங்கள் ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி என்றால். இன்னும் சேட்டிலைட் விற்பனை, ஆடியோ விற்பனை, ப்ரீ டிக்கெட் புக்கில், டிக்கெட் புக்கிங் இதெல்லாம் சேர்ந்தால் ஒரு வாரத்திலேயே அப்படங்கள் ரூ.100 கோடிக்கு வசூலை தாண்டி சாதனை படைத்துவிடும் அதுதான் அஜித்தின் மாஸ் அவர் பேரைக் கேட்டாலோ அதிருமில்ல என சினிமாத்துறையினர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News