அப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடி வருகின்றது. இந்நிலையில் ஐசிசி அவர்களுக்கு டெஸ்ட் விளையாடும் அந்தஸ்தை ஜூன் 2017 இல் வழங்கியது. மேலும் முழு உறுப்பினராகவும் அவர்களை சேர்த்துக்கொண்டனர்.

அப்கானிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக தான் முதல் போட்டியை விளையாட உள்ளனர். ஜூன் 14 – 18 இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளது. எப்பொழுதுமே ஜூன் மாதத்தில் நாம் இந்தியாவில் வெப்பம காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாட மாட்டோம். எனினும் வேறு நாட்களில் இந்திய டீம்மின் அட்டவணை சரி வரத்து என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து விட்டனர். மற்ற ஊர்களை விட பெங்களூரு கூலாக இருக்கும் என்பதால் போட்டியை பெங்களுருவில் நடத்துகின்றனர்.

Ajinkya Rahane

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, “சர்ரே” அணிக்காக கவுண்டி கிரிக்கெட் விளையாட போவதால், அணியின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒர்க் லோட் கருத்தில் கொண்டு ரோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராஹ் போன்றவர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும்மன்றி கருண் நாயர், குல்தீப் யாதவ் மற்றும் ஷரத்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்

சினிமா பேட்டை கொசுறு நியூஸ்

ஏற்கனவே பாகிஸ்தான், ஜிம்பாவெ, பங்களாதேஷ் போன்ற நாடுகள் தங்களின் முதல் போட்டியை இந்தியாவை எதிர்த்து விளையாடினர். இந்நிலையில் நான்காவது நாடாக அப்கானிஸ்தான் இணைந்துள்ளது.