ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

NZ-க்கு எதிரான டெஸ்ட்.. 12 ஆண்டுகளுக்குப் பின் படுதோல்வி.. இந்திய அணி தோற்க என்ன காரணம்?

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பாவான இருக்கும் இந்தியா அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ளதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

வங்கதேசத்திற் எதிராக டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி அதே முனைப்புடன் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம்தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் நடந்தது. இதில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 24 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியை டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி வென்ற நிலையில், ரோஹித் சர்மா தலையிலான இந்தியா அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முயற்சி மேற்கொண்ட நிலையில் அது பழிக்கவில்லை.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்ததற்கு ரோஹித் சர்மாவின் தவறான முடிவு காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக அவர் வியூகம் வைத்து திட்டமிட்டிருந்தாலும், அதில் இந்திய பேட்ஸ்மேன்களே சிக்கியதுதான் இத்தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் நிலவும் நிலையில், இங்கு நடக்கும் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் பிட்சுகளும் தயார் செய்யப்பட்டன. அதேசமயம் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்து வீச்சை சந்திக்கத் தயாராகவில்லை என தெரிகிறது. இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மண்ணைக் கவ்வி 2 போட்டிகளிலும் தோற்றது.

ரோஹித் சர்மாவின் திட்டம்

இத்தோல்வியில் இருந்து மீள முடியாமல் இருக்கும் என நியூசிலாந்து அணியை சுழல் பந்து வீச்சில் வீழ்த்திவிடலாம் என தவறாக நினைத்த ரோஹித் சர்மாவின் திட்டம் பழிக்கவில்லை என தெரிகிறது. மூத்த வீரர்களான விராட் கோலி உள்ளிட்டோர் சரியாக பேட்டிங் ஆடவில்லை. ஆனால் இந்திய அணியின் பலவீனத்தை வைத்தே அவர்களை புனே மைதானத்தில் சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டனர் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்.

குறிப்பாக இந்திய அணி 46 என்ற சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையிலும் 2வது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா சுழல் பந்து வீச்சுக்கு தயார் செய்யும்படி ஆலோசனை அளித்த நிலையில், இதை ஏற்கனவே நியூசிலாந்து கணித்ததோ என்னவோ, தம் அணியில் 3 சுழல் பந்து வீச்சாளர்களைக் களமிறக்கி, இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தது. ஆனால் மாற்றுத் திட்டத்திற்கும், சமாளிக்கவும் இந்திய அணி தயாராகவில்லை என கூறப்படுகிறது.

சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி

எனவே 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸில் 359 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்த இந்திய அணி 245 ரன்கள்தான் எடுத்தது. எனவே 113 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News