fbpx
Connect with us

பேஸ்புக்கின் மூலம் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு, பெண் ஒருவர் கைது.

facebook-terrorist

India | இந்தியா

பேஸ்புக்கின் மூலம் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு, பெண் ஒருவர் கைது.

பேஸ்புக்கின் மூலம் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆல் சேர்ப்பதாக இளம்பெண் ஒருவர் கைது. ஜம்மு-காஷ்மீரில் சமீபகாலமாக இளைஞர்களையும், மாணவர்களையும் பயங்கரவாத இயக்கத்திற்கு அவர்களை மூளை சலவை செய்து இயக்கத்திற்கு ஆல் சேர்த்துள்ளனர்.

கல்லூரியில் படிக்கும் மாணவர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்த சிலர் தூண்டி வருகின்றனர். இதுபற்றி உளவுத்துறை தகவல்வந்ததை அடுத்து அந்த கும்பலை பிடிக்க ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வடக்கு காஷ்மீர் மாநிலம் பந்திப்பூர் மாவட்டத்திலுல்ல நாய்ட்காய் என்ற பகுதியைச் சேர்ந்த சாயிஷா என்ற பெண்ணை உளவு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

30 வயதுக்குள் இருக்கும் அந்த பெண் பேஸ்புக்கின் மூலம் பயங்கரவாத இயக்கத்திற்கு இளைஞர்களை எழுத்து ஆயுத போராட்டம் நடத்த தூண்டியதாகவும் தெரியவந்துள்ளது. ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தில்இளைஞர்களை சேர்ப்பதற்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரது பேஸ்புக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாயிஷாவின் சகோதரர்களான இரண்டு பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top