விஜய் தொலைக்காட்சி நடத்தும் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சமேயில்லை. இந்நிகழ்ச்சியில் சினேகன் அனைவரையும் கட்டிப்பிடிக்கின்றார் என்று ஏற்கனவே மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடந்த பலுன் உடைக்கும் போட்டியில் சுஜாவுடன் மிகவும் மோசமாக சண்டையிட்டார். இதனால் அவருக்கும், சுஜாவுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

இதனையடுத்து கணேஷிடம் சுஜா பேசுகையில், நீங்கள் பிந்துமாதவியுடன் விளையாடும்போது தவறாக கைபட்டு விடக்கூடாது என்பதற்காக கண்ணியமாக விளையாடினீர்கள்.

ஆனால் சினேகன் அப்படியில்லை. இப்போது தான் கூடையில் பந்து போடும் விளையாட்டிலிருந்து பிந்து மாதவி சினேகனுடன் சண்டையிட்டு ஏன் வெளியேறினார் என்பது புரிகிறது என்று கூறியுள்ளார்.