கிறிஸ்மஸ்-ஐ குறிவைக்கும் 10 படங்கள்..யாரு வசூல் வேட்டை ஆட போறா தெரியுமா.?

சினிமாவில் பண்டிகை காலத்தில் ஒரு திரைப்படம் வெளியானால் மற்ற நாட்களில் கிடைக்கும் வசூலைவிட விடுமுறை நாட்களில் அதிக லாபம் கிடைக்கும். இந்த நோக்கத்தில் பல திரைப்படங்கள் விடுமுறை நாட்களை குறிவைத்து வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

அந்த வரிசையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழில் மொத்தம் 10 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் ஏழு திரைப்படங்கள் திரையரங்கிலும், 3 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அந்த படங்களின் விவரம் உங்களுக்காக

கலாட்டா கல்யாணம் – தனுஷ், சாரா அலி கான், அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கலாட்டா கல்யாணம். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தியில் அத்ரங்கி ரே என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

ராக்கி –  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

83 –  கபீர் கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்ற நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் தமிழ் நடிகர் ஜீவாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஆனந்தம் விளையாடும் வீடு – இயக்குனர் சேரன், கௌதம் கார்த்திக், டேனியல் பாலாஜி, சினேகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

சியாம் சிங்கா ராய் – பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்று கதை அமைப்பைக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம். ராகுல் சத்ரியன் இயக்கியுள்ள இப்படத்தில் நானி ஹீரோவாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தள்ளி போகாதே – அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஆர் கண்ணன் இயக்கியுள்ளார். ரொமான்டிக் படமான இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ரைட்டர் – இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ரைட்ட.ர் இப்படத்தில் இனியா, மகேஸ்வரி உள்ளிட்ட நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 24 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மின்னல் முரளி – மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டோவினோ தோமஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை பேசில் ஜோசப் இயக்கியுள்ளார். சூப்பர் ஹீரோ போன்ற கதை அமைப்பைக் கொண்ட இப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மேட்ரிக்ஸ் – மிக பிரம்மாண்டமாக ஹாலிவுட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 24 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிளட் மணி – நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். த்ரில்லர் கதையான இப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

இந்த பத்து திரைப்படங்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வரும் டிசம்பர் 24 அன்று திரையரங்கு மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து  வெளிவர உள்ள 83 மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளிவர உள்ள ராக்கி ஆகிய படங்கள் அதிக வசூலை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.