ஒரு இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தமிழகத்தின் எந்த  கோவில்கள் என்றாலும்  அனுமதி பெற்று ஷூட்டிங் நடத்தி விடலாம்.

அது அறநிலையத்துறை கோவிலாக இருந்தாலும் சரி, தர்மகர்த்தாக்கள் நிர்வாகிக்கும் கோவில்களாக இருந்தாலும் சரி..!

ஆனால் இந்த பத்து வருடங்களுக்குள் ஒரு இந்து கோவிலுக்குள் நுழைந்து ஷூட்டிங் நடத்துவது  அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

காரணம் சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த விளக்குகளினால் கோயில்களில் உள்ள புராதன சிலைகள் மற்றும் ஓவியங்கள் பாதிக்கப்படுவதால், கோவில்களில் படப்பிடிப்பு நடத்த அறநிலையத்துறை தடை விதித்துள்ளனர்.

இந்த தடையால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

காரணம், சினிமாவில்  காதலி சந்திப்பது, பாடல் காட்சி, திருவிழாவில் வரும் சண்டை என்று, கோயில்களை அடிக்கடி பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்ட  தடை அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  எவ்வோளதான் முயற்சி செய்தாலும் பெரிய ஸ்கோருக்கான வழியை கண்டுபிடிக்க முடியவில்லை: விராட் கோலி வேதனை

ஆனால் உண்மையான காரணங்கள் என்ன என்று பார்க்கலாமா..? சொன்னால் அதிர்ந்து போவீர்கள்  அதாவது கோவிலின் புனிதம் படபிடிப்பு குழுவினர்களுக்கு தெரிவதில்லை. உள்ளேயே செருப்பு போட்டுக் கொண்டு நடமாடுவது.

பான்பராக் போட்டு  கண்ட இடத்திலும் எச்சில் துப்புவது, உள்ளேயே மறைவாக நின்று தம்மடிப்பது,  இப்படி சில அத்துமீறல்கள்..! இது கூட எச்சரித்து மன்னித்து விடலாம்.

ஆனால் கூட்டம் அதிகம் இல்லாத கோவில்களில் யாரும் பார்ப்பதில்லை என்கிற நம்பிக்கையில், கறி  மீன்கள் சாப்பிட்டு கழிவுகளையும் அங்கேயே போட்டுவிட்டு,   ஊர் மக்களிடம் அவப்பெயர் வாங்கும் சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளது.

காபி, டீ குடிக்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள் கூட அப்படி அப்படியே கிடந்த சம்பவங்களும் நிறைய நடந்து மக்கள் மத்தியில் கடும் கெட்ட பெயர்களுக்கு ஆளானார்கள் சினிமாக் காரர்கள்..!

ஒரு மலையாளப் படப்பிடிப்பின்  ஷூட்டிங் கோவூர் கோவிலில் நடந்த போது பலான மேட்டரில் துணை நடிகை சிக்கினார். ஊர்மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

அதிகம் படித்தவை:  டைனோசர்கள் அழிவதற்கு காரணமான அந்த 30 வினாடிகள்: மனிதன் தோன்றியது இப்படி தான்!

இவ்வளவிற்கும் இயக்குனர்கள் நடிகர்கள், மிகவும் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொண்டாலும் மூன்றாம் கட்ட சினிமா தொழிலாளிகள் சுத்தபத்தம் பார்க்காமல் கோவில்களின் புனிதத் தன்மையை கெடுப்பதே காரணம் என்கிறார்கள் கிராமத்து மக்கள்.

இப்படி எல்லா வகையிலும் பெயரைக் கெடுத்துக் கொண்ட சில தயாரிப்பு நிறுவனங்களால் நல்ல கம்பெனிகளும் கோவில்களுக்குள் ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை.

அதையும் மீறி  சமீபகாலமாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

அவ்வாறு படப்பிடிப்புகள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது ரகசியமாக படப்பிடிப்பு நடத்தி அந்த காட்சி திரையில் வெளி வந்தாலோ சம்பந்தப்பட்ட திரைப்பட துறையினர் மீது ‘கிரிமினல்’ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.