fbpx
Connect with us

Cinemapettai

விஜய் பாடிய குட்டிக்கதை பாடலை தெலுங்கில் பாடப்போகும் பிரபல நடிகர்.. வேற லெவல் மாஸ்

vijay-kutty-song

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பாடிய குட்டிக்கதை பாடலை தெலுங்கில் பாடப்போகும் பிரபல நடிகர்.. வேற லெவல் மாஸ்

தமிழ் படங்களைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் தளபதி விஜய்யின் படங்கள் சமீபகாலமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் தெலுங்கு பதிப்பு நடைபெற இருக்கிறது. இதில் முதல் முதலாக குட்டிக்கதை பாடல் தெலுங்கில் வெளியாக உள்ளது.

தமிழில் தளபதி விஜய் தனது சொந்த குரலில் பாடிய குட்டி கதை பாடல் யூடியூபில் பல சாதனைகளை நிகழ்த்தியது. அனிருத் இசையமைத்திருந்த ஒரு குட்டி கதை பாடல் தற்போது உலகம் முழுவதும் மொழி தெரியாதவர்கள் கூட மாஸ்டர் பட பாடலை ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கிலும் வெளிவர உள்ள மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடலை தெலுங்கு பவர் ஸ்டார் ஜூனியர் என்டிஆர் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் தளபதி விஜய்யின் படங்களை தொடர்ந்து தெலுங்கில் ஆதரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பெரிய மார்க்கெட்டை விஜய்க்கு உருவாக்க ஜூனியர் என்டிஆர் குரலில் குட்டிக்கதை பாடல் விரைவில் பதிவு செய்யப்பட்டு வெளியிட உள்ளது. இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி மாஸ்டர் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top