fbpx
Connect with us

இதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல… புலம்பும் சூர்யா பட தயாரிப்பாளர்.!

surya

News | செய்திகள்

இதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல… புலம்பும் சூர்யா பட தயாரிப்பாளர்.!

தயாரிப்பாளர்கள் நிலைமையை புரிந்து கொள்ளும் தெலுங்கு திரையுலகில் படம் பண்ண இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நா பேரு சூர்யா.. நா இல்லு இந்தியா’ என்ற படம் தமிழில், ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த மாதம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக `ஸ்டூடியோ கீரின்’ ஞானவேல் ராஜா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகம் பற்றி வெளிப்படையாக பேசினார். தமிழ் திரையுலகம் பல கோரிக்கைகளுக்கே போராட்டத்தை முன்னெடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. தெலுங்கு திரையுலகில் இருந்து கோலிவுட் மக்கள் கத்துக்கொள்ள நிறைய இருக்கு. 100 கோடி ரூபாய் வியாபாரம் உள்ள படமுன்னா, தெலுங்கில் நடிகருக்கு 15 கோடி ரூபாய் சம்பளமும் 50 லட்ச ரூபா அட்வான்ஸும் கொடுத்தா போதும். அதே, தமிழில் 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்கப்படுது. 10 கோடி ரூபாய் அட்வான்ஸா கேட்குறாங்க. இதுவே, தமிழ் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்கு. மத்த செலவு எல்லாம் சேர்க்காமல், நடிகர்கள் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு பல லட்சங்கள் செலவாகுது.

ஆனால், தெலுங்கு திரையுலகில் இந்த புரிதல் அதிகமாகவே இருக்கு. நானும் அங்கு ஒரு ஆபீஸ் போட்டுவிட்டேன். விரைவில் அங்கு வாழ்வை தொடங்கி விடுவேன். படம் பண்ணி நஷ்டமாவதை விட எங்கு நல்ல லாபம் கிடைக்குமோ அங்கு படம் தயாரிப்பதே மேல் எனத் தெரிவித்துள்ளார். ஞானவேல் ராஜா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் நோட்டா படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பருத்தி வீரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தமிழில் தயாரித்தவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top