தமிழகத்தை தொடர்ந்து குறிவைக்கும் தெலுங்கு திரையுலகம்.. புஷ்பாக்கு அடுத்து களமிறங்கும் நடிகர்

சமீபகாலமாக தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் அதிக அளவில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையான சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இதனால் தமிழ் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்து வந்தனர்.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சாமி சாமி என்ற பாடலை விஜய் டிவி புகழ் ராஜலட்சுமி பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தை படக்குழுவினர் சென்னையில் அதிக அளவில் பிரமோஷன் செய்தனர்.

அதே போல் இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அதன் போஸ்டர்கள், டிரைலர்கள், பாடல்கள் என்று அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு என்ற பாடல் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஆட வைத்துள்ளது.

புஷ்பா படத்தை தொடர்ந்து இந்தப் படமும் தமிழ் ரசிகர்களை அதிக எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்த படத்தையும் ஆந்திராவை போல சென்னையிலும் அதிக அளவில் பிரமோஷன் செய்து வருகின்றனர். இந்த இரு படங்களையும் தொடர்ந்து பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் தனது அடுத்த படத்திற்காக சென்னைக்கு வர இருக்கிறார்.

இப்படி தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்கள் பலரும் சென்னையை நோக்கி படை எடுத்து வருவதால் தமிழ் திரை உலகம் சற்று அதிர்ச்சியை சந்தித்துள்ளது. இருப்பினும் நம்ம ஊரு ஹீரோக்கள் பலரும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தளபதியின் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் தளபதி 66 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது. அவரைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்