நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகைகள்… அதிர்ச்சியில் நடிகர்கள்

நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல நடிகைகள் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ramya nambeesan
ramya nambeesan

மலையாள நடிகை கடத்தப்பட்ட சம்பவம் மல்லுவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன், பின்னணியில் நடிகர் திலீப் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரின் முதல் மனைவி மஞ்சு வாரியருடனான விவகாரத்துக்கு அந்நடிகை தான் காரணமாக அமைந்ததாகவும், அதற்கு பழி வாங்கவே இச்சம்பவத்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. தொடர்ந்து, திலீப்பை காவல்துறை கைது செய்தது. அவரை நடிகர் சங்கத்தில் இருந்து விலக்குவதாக மலையாள நடிகர் சங்கமான அம்மா அறிவித்தது. 83 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

கேரளாவில் மலையாள நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அம்மா என்ற பெயரில் சங்கம் இயங்கி வருகிறது. இதன்மூலம், நட்சத்திரங்களின் தேவைகள், பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகிறது. சங்கத்தின் தலைவராக மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் பதவி வகித்து வருகிறார். கடந்த 17 வருடமாக அம்மா சங்கத்தின் தலைவர் பதவியில் இருக்கும் இன்னசென்ட் தனது சினிமா சார்ந்த பணிக்கு ஓய்வு தரும் முடிவில் இருப்பதாக அறிவித்தார். அம்மா சங்க தலைவர் தேர்தலில் தான் போட்டியிட போவது இல்லை எனத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, நடிகர் மோகன்லால் போட்டியின்றி தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தலைவராக பதவியேற்றப்பின், முதல் அறிவிப்பாக நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிறை சென்றதற்காக விலக்கப்பட்ட திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். பெரும்பாலான உறுப்பினர்கள் திலீப்பிற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், அவரை மீண்டும் இணைத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மலையாள உலகில் சலசலப்பு நிலவுகிறது. நடிகை ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட 5 நடிகைகள் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.