Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் நடிகர்களுக்கு தடை போட்ட தெலுங்கு சினிமா.. காரணம் என்ன?
சினிமாவுக்கு மொழி தேவையில்லை என அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தாலும் உலக அளவில் எந்த மொழிப் படங்கள் அதிக வசூல் செய்கின்றதோ அதைப் பொறுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அவர்களுக்கு தெரியாமலேயே பிரிந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் தற்போது தெலுங்கு சினிமாவிலும் ஒரு பெரிய பிரச்சனை உருவெடுத்துள்ளது. அதாவது மற்ற மொழி நடிகர்கள் தெலுங்கு மொழியில் நடிப்பதால் தெலுங்கு சினிமாவில் உள்ள குணச்சித்திர நடிகருக்கான வாய்ப்பு குறைந்து கொண்டே போகிறது.
இதனால் அவர்கள் சம்பள ரீதியாக நலிவுற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் தெலுங்கு சினிமாவில் இனி தெலுங்கு நடிகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒரு அமைப்பு மனு கொடுத்துள்ளது.
இதனால் தற்போது இயக்குனர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. ஹாலிவுட் சினிமாவில் கூட நிறவெறி என்னும் பிரச்சனை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.
