Tamil Cinema News | சினிமா செய்திகள்
திடீரென மரணம் அடைந்த குழந்தை நட்சத்திரம்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்
பிரபல தெலுங்கு சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக வளர்ந்து வரும் கோகுல் சாய்கிருஷ்ணா என்ற குழந்தை திடீரென மரணம் அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தை பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து அசத்தி காட்டுபவர்.
இதனாலேயே இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமடைந்து சினிமாக்களில் நடித்து வந்தார். சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சாய் கிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
யாரும் எதிர்பாராத வகையில், சிறிய காய்ச்சல் வடிவத்தில் வந்த எமன் இந்த அழகிய சின்ன உயிரை பறித்து விட்டது என தெலுங்கு திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் திரையுலகினர் அனைவரும் கோகுல் சாய் கிருஷ்ணாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மழைக்காலங்களில் குழந்தைகளை எச்சரிக்கையாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது இந்த சிறு குழந்தையின் உயிர் இழப்பினால் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

Gokul-sai-krishna
