Connect with us

Cinemapettai

bigil-verithanam-record

Cinema News | சினிமா செய்திகள்

பிகில் – தெலுங்கிலும் கெத்து காட்டும் தளபதி விஜய்.. 400 திரையரங்குகளில் அலப்பறை

தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் இவரது படத்தை திருவிழா போல் கொண்டாடுவார்கள். ஆனால் தெலுங்கில் மட்டும் இவருக்கு மார்க்கெட் சரிவர அமையாமல் இருந்தது.

மெர்சல் படம் மூலம் தனக்கென புதிய மார்க்கெட் ஒன்றை தெலுங்கில் தொடங்கினார். மேலும் சர்கார் படமும் தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்றது. அதன் விளைவு, தற்போது தளபதி விஜயின் “பிகில்” திரைப்படம் 400 திரையரங்குகளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இப்பகுதிகளில் ரிலீசாக இருக்கிறது.

பிகில் படத்தின் தெலுங்கு உரிமையை பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.எம்.கோனாரு,தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:- “தளபதி விஜய்க்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது”.

அதைப்போல் இந்த படத்தின் கதை, தெலுங்கு ஆடியன்ஸுக்கு புதிதாகவும்,பிடிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால் இதனை பெரும் விலைக்கு பெற்று,மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறேன்.

இதற்காக தயாரிப்பாளர் மற்றும் தளபதி விஜய்க்கு நன்றி கூறுகிறேன். இந்த தீபாவளி நம்மளுது….”என்று உற்சாகமாக கூறியுள்ளார். இதனை “பிகில்” படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top