Connect with us

Cinemapettai

பிக்பாஸ் இறுதிப்போட்டியில் 25 லட்சம் பரிசை அள்ளியவர் இவர்தான்! கோலாகலமாக முடிந்த தெலுங்கு பிக் பாஸ்

biggboss-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் இறுதிப்போட்டியில் 25 லட்சம் பரிசை அள்ளியவர் இவர்தான்! கோலாகலமாக முடிந்த தெலுங்கு பிக் பாஸ்

தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. தமிழில் ஆரம்பிப்பதற்கு முன்னரே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழை விட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு மவுசு குறைவாக இருந்ததாக தெரிகிறது. பெரும்பாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும்போது தமிழ் ரசிகர்கள் மட்டுமே டிரெண்டிங்கில் இருப்பார்கள்.

அந்த அளவுக்கு தமிழக ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு ரசிகர்களை கவர வில்லை போலும். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஸ்டார் மா என்ற சேனல் நடத்தி வந்தது.

மேலும் தொகுப்பாளராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா பணியாற்றி வந்தார். நேற்று இறுதிப் போட்டி நடந்த நிலையில் அபிஜித் என்ற போட்டியாளர் முதலிடத்தை பெற்றுள்ளார். அவருக்கு 25 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பைக் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

telugu-biggboss4-title-winner

telugu-biggboss4-title-winner

தெலுங்கு பிக்பாஸ் இறுதிப்போட்டியில் பிரபல நடிகர் நாகர்ஜூனா உடன் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் சிரஞ்சீவியும் கலந்துகொண்டு பிக்பாஸ் டிராபியை வழங்கி உள்ளார்.

முதலில் இறுதிப்போட்டிக்கு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை அழைத்ததாகவும், அவர் வர மறுத்ததால் தற்போது அதே நிகழ்ச்சிக்கு சிரஞ்சீவியை அழைத்து வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top