Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹோட்டல் அறையில் பிக்பாஸ் நடிகையை கதற கதற.. அரசியல்வாதி மகனின் அட்டூழியம்.. சிக்கிய ஆதாரம்
சமீபகாலமாக பாலியல் தொல்லை கொடுப்பது பிறந்தநாளுக்கு பரிசு கொடுப்பதைப் போல் ஆகிவிட்டது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நடிகை அரசியல்வாதி மகன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தெலுங்கு பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் நடிகை சஞ்சனா(27).
இவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பிரபல அரசியல்வாதி முன்னாள் எம்எல்ஏ நந்தீஸ்வர் கவுடு என்பவரின் மகன் ஆசிஸ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் நடிகையை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு சஞ்சனா ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலுக்கு இரவில் சென்றதாகவும், அங்கு ஆசிஸ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படுக்கையில் தள்ளி வன்புணர்வு செய்ய முயன்றதாகவும், அவரை தள்ளிவிட்டு நடிகை வெளியே ஓடியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னாடியே துரத்தி வந்த ஆசிஸ், மாடியிலிருந்து நடிகையை தள்ளி விட முயன்ற தாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவை அனைத்தும் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் போலீசார் அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ மகன் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
