Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெலுங்கு மற்றும் தமிழ் பிக் பாஸ் ஒரே மேடையில் அதிரடி காட்டிய கமல்.. ரசிகர்களுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்
நேற்று நவம்பர் 7-ம் தேதியன்று உலகநாயகன் கமலஹாசன் தனது 66வது பிறந்தநாளை பிக்பாஸ் சீசன்4 செட்டில் கோலாகலமாக கொண்டாடினார்.
அந்த நேரத்தில் கமலை வாழ்த்தும் விதமாக தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும், அதன் தொகுப்பாளரான நாகர்ஜுனாவும் தமிழ் பிக் பாஸ் செட்டில் இருக்கும் திரையில் தோன்றி கமலுக்கு வாழ்த்து சொல்லி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
மேலும் தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது கைகளாலே உலக நாயகன் கமலுக்கு கேக்கை ஒன்றை தயார் செய்து பரிசளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கமலின் குடும்ப உறுப்பினர்களான சுகாசினி, அனு மற்றும் அவரது அண்ணன் சாருஹாசன் மற்றும் பல குடும்ப உறுப்பினர்களும் வாழ்த்து மழையில் கமலை நனைய வைத்தனர்.
மேலும் கமலுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக அவரது இரண்டு அன்பு மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் தந்தைக்கு பிறந்தநாள் பாடல் பாடினார்கள்.
அதன்பின் அவரது நெருங்கிய நண்பரான பிரபல மலையாள நடிகர் மோகன்லாலும் அவருக்கு வாழ்த்து கூறினார். இந்நிலையில் கமல் அவருக்கு நன்றி கூறியதோடு மட்டுமல்லாமல் தன்னை ஆதரித்து உயர்த்திய மலையாள திரையுலகத்தையும் நினைத்து பெருமிதம் அடைந்தார்.
மேலும் நடிகர் கமல் ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை அந்த அளவிற்கு விமர்சையாக கொண்டாட மாட்டாராம், ஏனென்றால் அன்றைய தினம்தான் அவருடைய தந்தையின் இறந்த நாள் என்பதால் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அதிக ஆர்வம் காட்ட மாட்டாராம் என்ற சோகமான செய்தியைக் கூறி ரசிகர்களை சிலிர்பூட்டினார்.

tamil-telugu-big-boss
