fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சில்க் ஸ்மிதாவாக நடிக்க மறுத்த பிரபலம்.. இவங்கள போட்ட 10 பொருத்தமும் பக்காவா இருக்கும்!

silk-smitha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சில்க் ஸ்மிதாவாக நடிக்க மறுத்த பிரபலம்.. இவங்கள போட்ட 10 பொருத்தமும் பக்காவா இருக்கும்!

80களின் கவர்ச்சிக் கன்னியாக பல இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

மேலும் இவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி ஹிந்தியில் ஒரு படம் எடுக்கப்பட்டது. ஆனால் சில்க் ஸ்மிதா கோலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். எனவே. இவரது வரலாற்றை திரைப்படமாக எடுக்க சித்ரா லட்சுமணன் என்ற தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்க உள்ளார் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த தெலுங்கு நடிகை அதற்கு மறுப்பு தெரிவித்து, ட்வீட் ஒன்றை  போட்டிருக்கிறார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் அனுசியா. இவர் மணிகண்டன் இயக்கவுள்ள படத்தில், சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில்  நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஏனென்றால் சமீபத்தில் சில்க் ஸ்மிதா போன்ற தோற்றத்தில் அனுசியா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இணையத்தை அலறவிட்டார்.

Anusuya

Anusuya

ஆனால் தற்போது அனுசுயா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவங்கள போட்ட 10 பொருத்தமும் பக்காவா இருக்கும் என ரசிகர்கள் மாளவிகா மோகன் அல்லது ரம்யா பாண்டியன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top