தொடர் தோல்வி, ராசி இல்லாமல் போன நடிகை.. கொடுத்த அட்வான்சை திருப்பிக் கேட்கும் தயாரிப்பாளர்கள்

பிரபல வாரிசு நடிகருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அந்த இளம் நடிகை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும் அந்த நடிகைக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தது.

மேலும் தெலுங்கு பக்கம் அதிக கவனம் செலுத்தி வந்த நடிகை சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் ஓரளவுக்கு நடிகைக்கு புகழைத் தேடிக் கொடுத்தது. இதனால் அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் பிஸியான நடிகையாக மாறினார்.

முன்னணி நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அவருடைய நேரமோ என்னவோ தெரியவில்லை அந்த படங்கள் யாவும் வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.

அதிலும் தமிழில் அண்ணன் தம்பி நடிகர்கள் இருவருடனும் நடிகை நடித்த திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் நடிகை தற்போது ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு விட்டார். மேலும் இவரை புதிய படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள்.

ஏற்கனவே நடிகையை தங்கள் படங்களில் புக் செய்திருந்த தயாரிப்பாளர்கள் தற்போது கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுக்குமாறு நச்சரிக்க ஆரம்பித்து உள்ளனர். இதனால் நடிகையின் மார்க்கெட் இனி அவ்வளவுதான் என்று ஒரு பேச்சு திரையுலகில் அடிபட்டு வருகிறது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை தற்போது வளர்ந்து வரும் பிரபல நடிகருடன் நடித்து வரும் அந்த திரைப்படத்தை தான் மலை போல் நம்பி இருக்கிறார். இந்த படம் வெளிவந்தால் எனக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று நடிகை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்