6.5 கோடிக்கு லம்போகினி கார் வாங்கிய முன்னணி நடிகர்.. 150 கோடி சம்பளம் வாங்குனா இதெல்லா சாதாரணம்தான்!

கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் நடிகர் நடிகைகள் பலரும் விதவிதமான கார் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் முதலீடு செய்து வருவதை சமீப காலமாக பார்க்கிறோம்.

அதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் விலையுயர்ந்த கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழில் அஜித், விஜய், தனுஷ் போன்றவர்கள் மார்கெட்டுக்கு எந்த புதிய கார் வந்தாலும் அதை வாங்கி விடுவார்கள்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ் சமீபத்தில் தன் வாழ்நாள் கனவான லம்போகினி காரை சுமார் 6.5 கோடி கொடுத்து இறக்குமதி செய்துள்ள புகைப்படங்கள்தான் இணையதளத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

prabhas-cinemapettai
prabhas-cinemapettai

ஒருமுறை பிரபாஸ் ஒரு நேர்காணலில் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது விலை உயர்ந்த லம்போகினி கார் வாங்கி விட வேண்டும் என கூறியதை தற்போது பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

பிரபாஸ் சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் 100 முதல் 150 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல் சமீபத்தில் இன்னொரு தெலுங்கு முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் 5 கோடி செலவு பண்ணி புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார் என்பதும் கூடுதல் தகவல்.

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் பட்ஜெட் சுமார் 400 முதல் 500 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்