Connect with us
Cinemapettai

Cinemapettai

தெலுங்கானா அரசு தமிழிசையுடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும்.. பா.ஜ.க போர்க்கொடி

tamilisai

Politics | அரசியல்

தெலுங்கானா அரசு தமிழிசையுடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும்.. பா.ஜ.க போர்க்கொடி

ஆளுநர் நியமனம் குறித்து   தெலுங்கானா மாநில அரசின் மக்கள் தொடர்பாளர் விமர்சித்த நிலையில்,இதற்காக மாநில அரசு ஆளுநர் தமிசையிடம்  நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டுமென தெலுங்கானா  பாஜகவினர் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன்  கடந்த செப்டம்பர் 8ம் தேதி  பதவியை ஏற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்துகொண்டு வரவேற்றார்.

ஆனால் அன்றைய தினமே முதல்வர் சந்திரசேகர ராவின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான நரசிம்ம ராவ்  ஆளுனர் நியமனத்தில் மத்திய அரசு தலையீடு உள்ளதாகவும் அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் மூலம் குறுக்கிடுவதாகவும் விமர்சித்து கட்டுரை எழுதிஇருந்தார்.

இதற்கு தெலங்கானா மாநில பாஜகவினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அரசிடம் சம்பளம் பெறும் ஒருவர் இது போல பேசுவது தவறு. இது புதிதாக பதவியேற்றுள்ள ஆளுநரை அவமதிப்பது போல் என்றும் இதற்காக தெலுங்கானா முதல்வர் ஆளுநரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும்  கூறியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top