Connect with us
Cinemapettai

Cinemapettai

santhanam-robo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சின்னத்திரையிலிருந்து சினிமாவில் கால் பதித்த நடிகர்கள்.. இதில் உங்களுக்கு பிடித்தவர் யார்?

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு கால் பதிப்பது கடினமான முயற்சிதான், அந்த முயற்சியில் வெற்றி பெற்று  தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

சின்னத்திரையில் நகைச்சுவை நாயகனாக வலம் வந்தவர் சிவகார்த்திகேயன். இவர் மெரீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியுடன் சேர்ந்து காமெடியில் கலக்கி இருப்பார் என்றே கூறலாம்.

sivakarthikeyan-hero

sivakarthikeyan-hero

தற்போது டாக்டர்,  அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஒரு நடிகனையும் தாண்டி தற்போது படங்களை தயாரிக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தலை நிமிர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியின் பிரபல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டிருந்தவர் ரோபோ சங்கர். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி,  பாஸ்கர் ஒரு ராஸ்கல், விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.

robo-shankar-komathi

robo-shankar-komathi

நடிப்பது மட்டுமல்லாமல் ‘தி லயன் கிங்’ என்ற படத்தில் பூம்பா என்ற கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து அசத்தி இருப்பார். கன்னிமாடம் என்ற படத்தில் பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி விஜய் டிவியின் ரமணி வெர்சஸ் ரமணி என்ற தொடரில் துணை இயக்குனராக வேலை செய்தவர். தற்போது நடிப்பையும் தாண்டி இயக்குனராக  தமிழ் சினிமாவில் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கிறார் என்றே கூறலாம். தமிழ் சமூகத்திற்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்.

samuthirakani

samuthirakani

நாடோடிகள், போராளி,  நிமிர்ந்து நில் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் அறிமுகமானவர்தான் சந்தானம். ‘சிவா மனசுல சக்தி’ என்ற படத்தில் நடிகர் ஜீவாவுடன் காமெடி கதாபாத்திரத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதற்குப்பின் அவர் காட்டில் மழைதான் என்றே கூறலாம் அடுத்தடுத்து காமெடி கதாபாத்திரத்தில் வெற்றிகண்டார் சந்தானம்.

santhanam

santhanam

தற்போது காமெடி கதாபாத்திரம் போரடித்து விட்டதால் நடிகனாக களம் இறங்கி உள்ளார். டகால்டி, சர்வர் சுந்தரம்  ஆகியவை சமீபத்தில் நடித்த படங்கள்.

சன் டிவியின் மூலம் சின்னத்திரையில் கால்பதித்த ரியோ ராஜ், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயனாக நடித்து பிரபலமானவர். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

shree

shree

விஜய் டிவியின் பிரபல ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீ. மாநகரம், பட்டாளம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற திறமையான நடிகர்களை வெளிக்கொண்டு வந்து உள்ள விஜய் டிவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top