டிஆர்பி-யில் அஜித், சூர்யாவை தும்சம் செய்த தளபதி.. எப்பவும் விஜய் தான் டாப்

கோலிவுட்டில் அதிக அளவிலான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். சமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் விஜய் படங்கள் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தியேட்டர்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியிலும் விஜய் படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை எண்டர்டெயின் செய்யும் விதமாக தொலைக்காட்சிகளில் படங்கள் ஒளிபரப்புவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஞாயிறன்று பைரவா, அஞ்சான், விவேகம் உள்ளிட்ட படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பைரவா படம் டெலிவிஷன் ரேட்டிங்கில் 13.15 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டும் இன்றி 10,244 இம்ப்ரஷன்களை பெற்று டாப்பில் உள்ளது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் தற்போது கூட பைரவா படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சூர்யா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான அஞ்சான் படம் இடம் பிடித்துள்ளது. இப்படம் டெலிவிஷன் ரேட்டிங்கில் 5.77 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் 3.39 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

தொலைக்காட்சியிலும் அஜித், சூர்யாவை ஓரங்கட்டி விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது இதன் மூலம் நிருபனமாகி உள்ளது. வசூலிலும் சரி, டிஆர்பியிலும் சரி நான் தான் டாப் என விஜய் நிரூபித்து விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்