சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்தில் பைரவா படம் ஒலிபரப்பியதால் ரசிகர்கள் பேருந்தை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விஜய் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பைரவா’. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஓமலூரில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பைரவா படம் ஒலிபரப்பியதாக கூறப்படுகிறது.

பேருந்தில் பயணித்த ரசிகர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தாரமங்கலம் அருகே ரசிகர்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் ஓட்டுநர், நடத்துனருக்கு அபராதம் விதித்தனர்.