Connect with us
Cinemapettai

Cinemapettai

telugana-wife-husband

India | இந்தியா

தகாத உறவு.. அடித்து உதைத்த மனைவி.. அரை நிர்வாணத்தில் கணவர் வலி தாங்க முடியாமல் கெஞ்சல்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தை அடுத்த செகந்திராபாத்தை சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் ஈஸ்டர் ஏஞ்சல் என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது

இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதை தெரிந்து கொண்ட மனைவி ஈஸ்த்தர் ஏஞ்சல் அவரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார் .

இதைதொடர்ந்து செகந்திராபாத் ஹல்வால் சுபாஷ் நகரில் காதலியுடன் குடியிருக்கும் கணவர் வீட்டுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் சென்றார். உள்ளே சென்றதும் அரை நிர்வாணத்தில் இருந்த கணவரை சராமரியாக தாக்கினார்.

உடன் இருந்த காதலியையும் தாக்கினார். மேற்கொண்டு ஆத்திரம் தீராத மனைவி கணவரை வெளியே இழுத்து வந்து துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்தார். இதனால் வலி தாங்க முடியாமல் கணவர் ஆன்ட்டி ஆன்ட்டி அடிக்க வேண்டாம் என சொல்லுங்கள் என அருகில் இருப்பவர்களிடம் கெஞ்சினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top