சிம்பு படத்திற்காக தயாராகும் தனுஷ் பட நடிகர்.. தாறுமாறாக வெளிவந்த புகைப்படம்!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு பல பிரச்சனைகளை கடந்து மாநாடு படத்தை நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து பிரச்சனை அளித்து வருகிறது. இருப்பினும் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

கௌதம் மேனன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு, ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் டிஜே அருணாச்சலம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘பத்து தல’ படப்பிடிப்பிற்காக தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். டிஜே அருணாச்சலம் ‘அசுரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜே அருணாச்சலம் படங்களில் நடிப்பதற்கு முன்னதாக பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர். இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம். இவரது ஆல்பம் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக முட்டு முட்டு என்ற பாடலும் எனக்கு ஒரு ஆசை என்ற பாடலும் இளைஞர்களின் ஃபேவரைட்டாக உள்ளது.

teejay arunasalam
teejay arunasalam

இதனை அடுத்து இவருக்கு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்ச நேரம் மட்டுமே படத்தில் தோன்றியிருந்தாலும் இவரது கதாபாத்திரம் மிகவும் வலுவான கதாபாத்திரமாகும். அனைவரின் மனதிலும் பதியும் அளவிற்கு இவரது நடிப்பு இருந்தது. எனவே தற்போது சிம்புவுடன் நடிக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்