fbpx
Connect with us

Cinemapettai

விஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..

News | செய்திகள்

விஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..

விஸ்வாசம் படத்தின் அப்டேட்களை தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் வரும் பொங்கலுக்கு வெளிவரும் என்று கண்டிப்பாக தெரிந்து விட்டது ஆனால் இன்னும் டீசர் மற்றும் டிரைலர் எதுவுமே இல்லாத சூழ்நிலையில் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கின்றனர்.

இது ஒரு விளம்பர உத்தியாக இருக்குமா என்றால் இல்லை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் என்ன அப்டேட் என்றால் வரும் கிறிஸ்துமஸுக்கு மட்டும் பத்தாண்டுகளுக்கு டீசர் மற்றும் சாங்ஸ் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் இதில் எது முதலில் வரும் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. படக்குழுவினரிடம் இருந்து ஒரு நம்பகமான செய்திகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு ஆறுதல் தரும் விஷயமாகும். இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் , இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் அனைவரும் அஜித்தை பற்றி விஸ்வாசம் படம் எடுத்து விதத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசி வருகின்றனர்.

அதில் அவர்கள் கூறிய அனைத்து விஷயங்களிலும் பொருந்தக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் தல அஜித் எல்லாத்தையும் சமமாக பார்ப்பது மட்டுமல்லாமல் மரியாதையும் அன்பும் நிறைந்த மனிதன் என்று பாராட்டி மகிழ்ந்துள்ளனர். இதுவே அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் அவரை திரையில் எப்போது பார்ப்போம் என்ற ஆர்வத்தை தூண்டி உள்ளது. இப்படி ஒரு மனிதரை நாம் நேரில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top