fbpx
Connect with us

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் உலகக்கோப்பை ஆடும் வீரர்கள் பட்டியல் வெளியானது. கெயில், நரேன், பொல்லார்ட், ரஸ்ஸல்; யார் உள்ளே யார் யார் வெளியே தெரியுமா ?

Sports | விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் உலகக்கோப்பை ஆடும் வீரர்கள் பட்டியல் வெளியானது. கெயில், நரேன், பொல்லார்ட், ரஸ்ஸல்; யார் உள்ளே யார் யார் வெளியே தெரியுமா ?

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது, அணைத்து நாடுகளும் தங்களின் தேர்வான வீரர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் – ஒரு காலகட்டத்தில் சிம்மசொப்பனம் இந்த அணி. அதிவேகப்பந்துவீச்சாளர்கள், தெறிக்கவிடும் பேட்ஸ்மேன்கள் என தாறுமாறு டீம் இவர்கள். எனினும் சில பல வருடங்களாக வீரர்களுக்கும், போர்டுக்கும் மோதல் கருத்துவேறுபாடு என பல சர்ச்சைகள். பல வீரர்கள் ப்ரொபசஷன்ல் ரூட்டில் டி 20 லீக் ஆட சென்று விட்டனர்.

எனினும் நான்கு வருடத்திற்கு ஒரு முறை வரும் உலகக்கோப்பை அணியில் சில ஆட விருப்பமாகவும் இருந்தனர்.

West Indies preliminary World Cup squad:

Jason Holder (capt), Fabian Allen, Darren Bravo, Carlos Brathwaite, Sheldon Cottrell, Shannon Gabriel, Chris Gayle, Shimron Hetmyer, Shai Hope (wk), Evin Lewis, Ashley Nurse, Nicholas Pooran, Kemar Roach, Andre Russell, Oshane Thomas

இந்நிலையில் கெயில் தன் ஐந்தாவது உலகக்கோப்பை ஆட தேர்வாகி உள்ளார். அதிரடி மன்னன் ரஸ்ஸல் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் பொல்லார்ட், சாமுவேல்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபில் இல் காயம் அடைந்த மும்பை இந்தியன்ஸின் அல்சாரி ஜோசப் சேர்க்கப்படவில்லை.

இது கடைசி தேதிக்கு முன் சொல்லப்பட்ட உத்தேச பட்டியில் தான்.
மே 23 ஆம் தேதிக்குள் இதில் மாற்றம் இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் சொல்லியுள்ளனர். அடுத்து நடக்கும் தொடரில் நன்றாக ஆடும் பட்சத்தில் மற்றவருக்கும் வாய்ப்பு கிடைக்குமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top