கங்குலி பொறுப்பேற்றவுடன் டெஸ்ட் போட்டியில் மாற்றம்.. கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

சௌரவ் கங்குலி இந்திய அணி சரிவில் இருந்த சமயத்தில் கேப்டனாக பொறுப்பேற்றவர். வெளிநாடுகளிலும் இந்திய டீம் வெற்றி பெற முடியும் என நிரூபித்தவர். என்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பாவரிட். பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்று இருக்கும் கங்குலி துரிதமாக செயல்பட்டு அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என பரவலாக பேசப்பட்டது.

டி 20 வந்த பிறகு டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு சற்றே குறைந்தது என்றால் அது மிகையாகாது. ஒரு நாள் போட்டிகள் பார்க்க மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளை புறக்கணித்து விடுகின்றனர். காரணம் ஐந்து நாள் எப்படி வருவது, எந்தநாளன்று லீவ் எடுப்பது என பல குழப்பங்கள் உண்டு.

டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக கூட்டம் வர நடவடிக்கை எடுப்பேன் என பிசிசிஐ தலைவராக பதவி ஏற்கும் முன் கங்குலி சொன்னார். அதே போல பிங்க் பால் வைத்து போட்டிகளை பகல் -இரவு போட்டிகளாக நடத்த திட்டமிட்டார். பங்களாதேஷ் போர்டுக்கும் கடிதம் அனுப்பினார்.

கொல்கத்தாவில் நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் – இரவு போட்டியாக நடத்த யோசித்தார். இதற்குமுன் வங்காள கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்ததால் அங்கும் பணிகளை முடக்கிவிட்டார்.

இதுவரை இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் பிங்க் பாலில் சர்வதேச டெஸ்ட் போட்டி ஆடியதில்லை. அவர்களும் ஓகே சொல்லிவிட்டனர்.

எனவே நவம்பர் 22 நடக்கும் போட்டி பகல் – இரவு ஆட்டமாகிறது.

Leave a Comment